அம்மா…

அம்மா நீ சமைத்தால் தினம்தினம்,
ஊரைத்தூக்கும் நறுமணம்

நீ வைத்தது சிம்பிள் சாம்பார் ரசம்
உண்பவர் விழுவார் உன் வசம்

அப்பப்போ டிபன் பாக்ஸில் பச்சை பருப்பு சாதம்
என் காலேஜ் friends க்கு அதுவே தேவாமிருதம்

தீபாவளிக்கு தூக்கு, ட்ரம் என சுட்டுத்தள்ளுவையே முறுக்கு
எனக்கு இன்று 10 பிழிவதற்குள் பிடித்தது கை சுளுக்கு

Fridgeக்குள் இருக்க வேண்டும் நிறைய நிறைய தக்காளி
குறைந்து விட்டாலோ அன்று நீ ஆவாயே பத்ரகாளி

படித்து என்னத்துக்கு ஆகும், “ ஒலியும் ஒளியும் பாரு “
அப்போ நான் கேட்கவில்லை , இப்போ சொல்ல எனக்கு யாரு

உனக்கு துவைத்த துணியை நீவிநீவி மடிக்க வேண்டும்
ரோஜா செம்பருத்தி என மிச்ச நேரம் செடிக்கு வேண்டும்

நீ போட்ட எம்ராய்டிங் எல்லாம் சூப்பர்டூப்பர் அழகே
அம்மா நீ ரொம்ப ரொம்ப வெகுளி , பார்த்து பேசி பழக

சிப்ஸ் பஜ்ஜி snacks sometimes meals ஆக மாறும்
எமக்கு வாயை கட்ட முடியாமல் weight வஞ்சனை இன்றி ஏறும்

இனிப்பான என் அம்மாவிற்கு பத்தாதற்கு சர்க்கரை
No big deal வீடும் வேலையும் தான் உனக்கு அக்கறை

வெட்டி சண்டை வீண்வாதம் நான் போட்டது கணக்கு இல்லை
இன்று அது திருப்பி வரும் என அறிவு அன்று எனக்கு இல்லை

என் கடமை முடிந்ததென தினமும் எழுதினாய் ஶ்ரீராமஜெயம்
விருப்பம்போலவே ஏகாதசி அன்று நீ வைகுண்டத்துக்கு விஜயம்.

சிறு வயது தந்த
இனிதான நியாபகங்கள்
கலக்கமான மனதினில்
உருக்கமான நினைவுகள்
இருட்டு வந்தபின் தான்
வெளிச்சம் எனக்கு விளங்கியது!!

Leave a comment