கொழு கொழு கன்னங்கள் சின்ன சின்ன சந்தோஷங்கள்

குட்டி போடாத மயில் இறகும்

இழுத்து மூடும் பென்சில் பாக்ஸும்

ஓடி ஏறிய பல்லவன் பஸ்சும்

ஒழுகி சாப்பிட்ட குச்சி ஐசும்

நொய்ந்து போன கேன்வாஸ் ஷூம்

ஜடையில் வைத்த ரோஜா பூவும்

நாடார் கடை கமர்கட்டும்

ரசித்து போட்ட கலர் கோலமும்

உப்பு மிளகாய் மாங்காய் கீத்தும்

மெரினா பீச்சின் மாலை காற்றும்

ஆட்டோ ரிக்ஸா பேரங்களும்

ஆஞ்சநேயர் கோயில் அடிப்பிரதக்ஷணங்களும்

மொட்டை மாடியில் வேடிக்கையும்

மஞ்சள் பட்டு பாவடையும்

என் வெகுளி எண்ணங்களும்

என் கொழு கொழு கன்னங்களும்

சின்ன சின்ன சந்தோஷங்கள்

உள்ளம் தொட்ட தருணங்கள்

மனதிற்கு பிடித்த நினைவுகள்

அறியாமல் சேர்த்த பொக்கிஷங்கள்

தினசரி வாழ்க்கையில் நிறைய உண்டு

எழுதிகொண்டே போகலாம்

விலைக்கு வாங்கத் தேவையில்லை

வியர்த்து அயரத் தேவை இல்லை

விழித்திருந்து ரசிக்கக் கற்றால்

வெய்ட்டனா மனது லைட் ஆகும்

Leave a comment